க்பெஹர்கா,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை க்பெஹர்காவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜோர்டான் ஹெர்மான் 53 ரன்கள் எடுத்தார். பார்ல் ராயல்ஸ் தரப்பில் பார்டுயின், மிட்செல் ஓவென், ஈஷன் மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்ல் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 100 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 48 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
பார்ல் ராயல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூபின் ஹெர்மான் 35 ரன் எடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் ஓவர்டென், மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், எய்டன் மார்க்ரம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.