எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரூ.70 லட்சம் மெத்தபெட்டமின் கடத்திய அசாம் பெண் உள்பட 2 பேர் கைது: தப்பிய 2 பேருக்கு வலை

2 months ago 9

துரைப்பாக்கம்: எழும்பூர் பகுதியில் காரில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமின் கடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு எழும்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தியபோது, அதில் வந்தவர்களில் 2 பேர் தப்பி ஓடினர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனை செய்த போது, அதில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் ெமத்தபெட்டமின் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே, காரில் இருந்த பெண் மற்றும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பேகம் (32) மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என தெரியவந்தது.

அதில், பாத்திமா பேகம் தனது ஆண் நண்பரான சாய்தீன் உடன் அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு மெத்தபெட்டமினை கடத்தி வந்துள்ளார். பிறகு போதை பொருளுடன் சென்னை ஏஜென்ட்கள் உதவியுடன் காரில் எடுத்து சென்ற போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அசாம் பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிராம மெத்தபெட்டமின் மற்றும் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காரில் இருந்து தப்பி ஓடிய அசாம் மாநிலத்தை சேர்ந்த சாய்தீன் மற்றும் சென்னையை சேர்ந்த முசாபீர் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரூ.70 லட்சம் மெத்தபெட்டமின் கடத்திய அசாம் பெண் உள்பட 2 பேர் கைது: தப்பிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article