எழுமாத்தூரில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

4 weeks ago 7

மொடக்குறிச்சி, டிச.17: எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு 379 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.134.09க்கும், அதிகபட்ச விலையாக ரூ.143.09க்கும், சராசரி விலையாக ரூ.141.09 க்கும் ஏலம் போனது.

அதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.104.89 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.130.09 காசுக்கும், சராசரி விலையாக ரூ.123.60 காசுக்கும் ஏலம் போனது.மொத்தமாக 16,826 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.21 லட்சத்து 73 ஆயிரத்து 499க்கு விற்பனை நடைபெற்றது.

The post எழுமாத்தூரில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article