எளியவர்களின் விருப்பத்துக்குரியவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். - கமல்ஹாசன் புகழாரம்

2 weeks ago 5

சென்னை,

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2025

Read Entire Article