எளிய வீட்டு வைத்தியம்!

4 weeks ago 7

நன்றி குங்குமம் தோழி

*காய்ச்சிய நல்லெண்ணெயில் எருக்கம் பூ போட்டு வடிகட்டி தேய்த்து தலை குளித்தால் கழுத்து வலி சரியாகும்.
*எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
*கோதுமையை வறுத்து அடை செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, முதுகு வலி குணமடையும்.
*வசம்பை உரை கல்லால் தேய்த்து அந்த விழுதைக் காலில் பற்றுப் போட்டுக் கொண்டால் கால் வீக்கம் குணமாகும்.
*வேப்பங் கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் தீக்காயம் சீக்கிரம் ஆறும்.
*வெந்தயக் கீரையுடன் அத்திப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டிகள் சீக்கிரம் உடைந்து ஆறும்.
*வல்லாரைக் கீரையை பொரியல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
*தூதுவளை கொடியை துண்டுகளாக்கி, மிளகு, சீரகம் ேசர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி தீரும். காய்ச்சல் விலகும்.
*பீட்ரூட் சாற்றுடன் கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.
*உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

தொகுப்பு: ஆர்.கீதா, சென்னை.

The post எளிய வீட்டு வைத்தியம்! appeared first on Dinakaran.

Read Entire Article