எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

3 months ago 12

 

பெரம்பலூர், அக். 22: எளம்பலூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக, குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், நேற்று காலை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியை சேர்ந்த செல்லம்மாள், சித்ரா, விஜயலட்சுமி, பொற்செல்வி உள்ளிட்ட 35 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு சேர்க்க வேண்டாம்.

எங்களுக்கு கிராமப்புற ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். நகராட்சியோடு இணைக் கப்பட்டால் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்த மாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரத்தை பாது காக்க இந்த திட்டத்தின் கீழ் பெறுகின்ற நிதி பெரும் உதவியாக இருக்கிறது. எனவே பெரம்பலூர் நகராட்சியோடு எளம்பலூர் ஊராட்சியை சேர்க்கும் முடிவை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article