டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்தே இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. இந்நிலையில், இந்தியா, வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு நேற்று குற்றம்சாட்டியது.
அதோடு அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதர் நேரில் விளக்கம் தர சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து வங்கதேச அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
The post எல்லையில் விதிமீறல் இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் appeared first on Dinakaran.