எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பஞ்சாப்பில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்

4 hours ago 1

சென்னை,

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பஞ்சாபில் சிக்கிக் கொண்ட தமிழ்நாடு மாணவர்கள் அரசின் உதவியால் பத்திரமாக சென்னை திரும்பி உள்ளனர். இதன்படி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து 5 மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், தாங்கள் தங்கியிருந்த இடத்தில் டிரோன் தாக்குதல் நடந்ததாகவும், பாதுகாப்புக் கருதியே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்ததாகவும், பல மாணவர்கள் தொடர்ந்து சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு நிலைமை சரியில்லாத காரணத்தால் பஞ்சாபில் இருந்து புறப்பட்டு தழிழகம் வந்துவிட்டோம் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் 7 மாணவர்கள் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளனர் என்றும் மாணவர்கள் கூறினர்.

முன்னதாக காஷ்மீரில் படித்து வரும் தமிழக மாணவர்கள் 52 பேரின் பாதுகாப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article