எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

3 months ago 22

இலங்கை: தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலையானார்கள். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 37 மீனவர்களை விடுதலை செய்தது. புதுக்கோட்டை மீனவர்களில் 4 படகோட்டிகளுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக கைது செய்யப்பட்டவருக்கு 18 மதம் சிறை தண்டனை விதித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த மாதம் 21 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்த நிலையில், மாநில அரசு மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மீனவர்களை மீட்டு வர கோரிக்கை முன்வைத்து இருந்தது. இதன்பேரில் இலங்கை அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article