. Draughtsman: 16 இடங்கள் (பொது-10, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சிவில் டிராப்ட்ஸ்மேன் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300.
2. Supervisor (Administration): 10 இடங்கள் (பொது-2, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் என்சிசி பயிற்சி பெற்று ‘B’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.
3. Driver Mechanical Transport (Ordinary Grade): 417 இடங்கள் (ெபாது- 208, எஸ்சி-61, எஸ்டி-36, ஒபிசி-61, பொருளாதார பிற்பட்டோர்-51). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் ஓட்டுனர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Turner: 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் டிரேடில் ஐடிஐ படித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200.
5. Machinist: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ படிப்பை என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200.
6. Driver (Road Roller): 2 இடங்கள் (எஸ்டி-1, ஒபிசி-1) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது ரோடு ரோலர் ஓட்டுநர் உரிமம் பெற்று 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.29,200- 92,300.
7. Operator (Excavating Machinery) (Ordinary Grade): 18 இடங்கள் (எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-14). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெச்எம்வி உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசி யினர் மட்டும் ரூ.50 ஐ ஸ்டேட் வங்கி செலான் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எல்லை சாலை நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடைபெறும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.marvels.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2024.
The post எல்லை சாலை நிறுவனத்தில் 474 இடங்கள் appeared first on Dinakaran.