'எல்லா பெண்களும் பிரபாஸை திருமணம் செய்ய விரும்புகிறார்கள்' - வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு

2 months ago 14

சென்னை

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 ஏ.டி' ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து, சலார் 2, கல்கி 2898 ஏடி 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு பிரபல நட்சத்திர நடிகை ஒருவர் பிரபாஸ் பற்றி சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதன்படி, அனைவரும் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என அவர் கூறினார். அந்த நடிகை வேறு யாருமில்லை தமன்னாதான். இவர் முன்னதாக ஒரு பேட்டியில், பாகுபலிக்குப் பிறகு அனைவரும் பிரபாஸை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்று கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'பாகுபலி படம் வெளியான பிறகு பிரபாசின் புகழ் நாடு முழுவதும் அதிகரித்தது. பாகுபலி படத்திற்கு பிறகு நம் நாட்டில் உள்ள பெண்கள் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். பாகுபலி கதாபாத்திரத்தைப்போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர் ராஜாதான். அவர் மிகவும் நல்ல மனிதர்' என்றார்.

தமன்னா பிரபாஸுடன் ரீபெல் மற்றும் பாகுபலி படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமன்னா கூறிய இந்த கருத்து தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Read Entire Article