
சென்னை,
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகமாக 'எல் 2 எம்புரான்' வெளியாகி உள்ளது.
இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த 27-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமா வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காப்பவர்' என்ற லிரிக் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பாலக்காடு ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.