எலும்பு, பல் மருத்துவத்துக்கு கை கொடுக்கும் முட்டை ஓடுகள்!: தமிழ்நாட்டின் ஆராய்ச்சி குழு தகவல்

17 hours ago 1

சேலம்: முட்டைகள் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால் முட்டை ஓடுகள் உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவுகின்றன. வெள்ளை, மஞ்சள் குருக்களை பயன்படுத்திய பிறகு குப்பையில் வீசப்படும் முட்டை ஓடுகளுக்குள் ஒளிந்து இருக்கும் மருத்துவ குணத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது தமிழ்நாட்டின் ஆராய்ச்சி குழு ஒன்று.

சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு முட்டை ஓடுகளில் இருந்து கால்சியம் பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்ஸிபடைட்டை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான இரண்டு தொழில் நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஹைட்ராக்ஸிபடைட் என்பது எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் ஒரு கால்சியம் பாஸ்பேட் தாதுவாகும். இந்த தொழில்நுட்பங்கள் மூலம் பொடியாக்கப்பட்ட முட்டை ஓடுகளை எலும்பு முறிவுகள், எலும்பு திசு பொறியியல் மற்றும் பல் சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது ஆய்வக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்ஸிபடைட்டை விரைவாக உற்பத்தி செய்ய தங்கள் தொழில்நுட்பம் உதவுவதாகவும், எலும்பு பல் தொடர்பான சிகிச்சைகளில் இது சிறந்த பலனை அளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 450க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள் இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஒட்டுக்களின் விலையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செல்வாகும் என்று கூறுகிறார்கள்.

The post எலும்பு, பல் மருத்துவத்துக்கு கை கொடுக்கும் முட்டை ஓடுகள்!: தமிழ்நாட்டின் ஆராய்ச்சி குழு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article