பணி: Para Medical Posts. மொத்த காலியிடங்கள்: 4576.
பணியிடங்களுக்கான தகுதி:
1. Assistant Dietician/Dietician பணிகளுக்கு Food and Nutrition பாடத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Assistant/Administrative Officer/Junior Assistant: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. Data Entry Operator: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் ஆங்கில எழுத்துக்களை டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Lower Division Clerk/Upper Division Clerk: பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்து நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. Assistant Engineer/Junior Engineer: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவில் பி.இ.,/டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.இதர துணை மருத்துவ பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துணை மருத்துவ படிப்புகளில்/ தொழில்நுட்ப பிரிவுகளில் எய்ம்ஸ் விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி, பணி, வயது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எய்ம்ஸ் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.3,000/-. எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2,400/-. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2025.
The post எய்ம்ஸ் மருத்துவமனையில் 4576 துணை மருத்துவ பணியிடங்கள் appeared first on Dinakaran.