'எம்புரான்' டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

5 hours ago 1

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாலமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில், நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில்  'எம்புரான்' டீசர் வரும் 26ம் தேதி மாலை 7.07மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம்  என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Welcome to the world of #L2E The first glimpse is releasing on 26/01/2025 at 7:07 PM IST Stay tuned! #L2E Releasing on 27th March 2025 ️ @mohanlal @PrithviOfficial #MuraliGopy @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @antonypbvr @aashirvadcine @prithvirajprodpic.twitter.com/2zVXQM48dY

— Lyca Productions (@LycaProductions) January 24, 2025
Read Entire Article