புதுடெல்லி: கடந்த வாரம் இந்தியஅரசின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளில் விளக்குவதற்காக அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவுக்காக காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்களை சமர்பிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்கள் கேட்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,\\” அது முழுமையான பொய். மே 16ம் தேதி காலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உரையாடினார். அந்த உரையாடலின் தொடர்ச்சியாக தான் 4 பெயர்களை பரிந்துரைத்து அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. பாஜவும், பிரதமரும் மலிவான அரசியல் செய்கிறார்கள்\\” என்றார்.
The post எம்பிக்களின் பெயரை கேட்கவில்லை என அரசு கூறுவது பொய்: ஒன்றிய அரசு மீது காங். சாடல் appeared first on Dinakaran.