எம்.ஜி.ஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை 40 புலம்பெயர்ந்த இளைஞர்கள் பார்வையிட்டனர்: தமிழ்நாடு அரசு தகவல்

2 months ago 11

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ‘‘இந்தியாவை அறிந்து கொள்வீர்” என்ற திட்டத்தின் 78வது நிகழ்ச்சி நவம்பர் 12 முதல் நவம்பர் 15 வரை நடைபெறுவதையொட்டி, இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திற்கு பல நாடுகளை சேர்ந்த 40 புலம்பெயர்ந்த இளைஞர்கள் குழு வருகை தந்து பார்வையிட்டனர். இந்நிறுவன வளாகத்திலுள்ள ஒலிப்பதிவு பிரிவில் எவ்வாறு ஒலிப்பதிவு பணிகள் நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டனர். இந்நிறுவனம் திரைத்துறையை வளர்ப்பதற்கு சிறப்பாக இயங்கி வருகின்றது என அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

The post எம்.ஜி.ஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை 40 புலம்பெயர்ந்த இளைஞர்கள் பார்வையிட்டனர்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article