முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் சாதித்த எம்ஜிஆரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காண்போம்.....
நாடக நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி சதி லீலாவதி படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எம்ஜிஆர். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் மூலமாக தமிழக ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார் எம்ஜிஆர்.
அண்ணாவின் மறைவுக்குப் பின் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக புதிய கட்சியை நிறுவிய எம்ஜிஆர், தமது திரைப்படங்கள் வாயிலாக தொடர்ந்து அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுசென்றார்1977ல் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் தொடர்ந்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். பள்ளிக் குழந்தைகளுக்காக அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் இன்று வரை நீடித்து வருகிறது
மறைந்து 37 ஆண்டுகளாகிய போதும் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் எம்ஜிஆர்.