'எமகாதகி' படத்தின் கதை எனக்கு புரியவில்லை - நடிகை ரூபா கொடுவாயூர்

10 hours ago 1

சென்னை,

'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'எமகாதகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 7-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது. இதில் நடித்த ரூபா கொடுவாயூருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்ட படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது பேசிய நடிகை ரூபா, "படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோது எனக்கு புரியவில்லை. இது எந்த மாதிரியான படம் என்பதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. படத்தில் பிணமாக நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன்.

பின்னர் தயாரிப்பாளர் தான் படத்தின் கதையை எனக்கு விளக்கினார். பிணமாக நடித்தாலும் உங்கள் கதாபாத்திரத்திற்கு காதல், துணிச்சல், நீதியை தட்டி கேட்கும் தைரியம் இருக்கும்படி கதை எழுதப்பட்டுள்ளது என்று கூறினார். அப்போது எனது கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு புரிந்தது. இது தான் என் முதல் படம். இப்படி ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article