எப்போதும் களத்தில் சண்டையிடும் மனநிலையில் இருக்ககூடாது: கோஹ்லிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை

4 months ago 10

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோஹ்லி 9 இன்னிங்சில் ஒரு சதம் உள்பட 190 ரன்களே எடுத்தார். அனைத்து போட்டிகளிலும் ஆப் ஸ்டெம்ப்பிற்கு வெளியே வந்த பந்தில் கவர் டிரைவ் அடிக்க முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக தென்ஆப்ரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டி அளித்துள்ளார். இதுபற்றிஅவர் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது.

எனக்கு ஸ்டெம்பிற்கு நேராக வரும்பந்தை அடிப்பது சிரமமாக இருக்கும். இது என்னுடைய பலவீனமாக இருந்தது. பிறகு என் தொழில் வாழ்க்கையின் பின் முனையில் நான் அதை சரி செய்து எல்லா சூழ்நிலைக்கு ரன்கள் எடுக்கும்படி பிரச்னைக்கு தீர்வை கண்டறிந்து கொண்டேன். விராட் கோஹ்லி எடுத்ததும் ஒரு போரில்(சண்டை) ஈடுபட்டு விடுகிறார். கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடைய பலமாகவும் அதுவே இருந்திருக்கிறது, தற்போது பலவீனமாகவும் அதுவே இருந்திருக்கிறது. விராட் கோஹ்லி எப்பொழுதும் சண்டையை விரும்புகிறார்.

உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் பார்மில் இல்லாத போது அத்தகைய மனநிலையில் இருக்கக் கூடாது. ஒவ்வொரு பந்தையும் மீட்டமைத்து விளையாடி பழைய பந்தை மறந்து விட வேண்டும். ஆனால் விராட்கோஹ்லி இதை மறந்து விடுகிறார். சண்டை மனப்பான்மையும் அதில் ஈடுபட ஆர்வமாக இருப்பதும், ஒரு முழு இந்தியாவிற்கும் தன்னை காட்ட நினைப்பதும் பிரச்னையாகிறது. வலைகளில் அதிக மணி நேரம் பயிற்சி செய்து, மனரீதியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, பந்துக்கு பந்து கவனம் செலுத்துவதின் மூலம் இதிலிருந்து வெளியில் வந்து விடலாம்”என தெரிவித்துள்ளார்.

The post எப்போதும் களத்தில் சண்டையிடும் மனநிலையில் இருக்ககூடாது: கோஹ்லிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article