முதல் தகவல் அறிக்கை விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தேசிய தகவல் மையத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பாலியல் வன்கொடுமை குறித்த முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் இதுதொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றின. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்துக்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமை விளக்கம் அளித்துள்ளது.