ஆலுார்: சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளிகளுக்கான ‘எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்’ 3வது தொடர் பெங்களூர் அருகே உள்ள ஆலூரில் நடந்தது. அதன் இறுதிப் போட்டியில் பெங்களூரு ஈகிள்ஸ், சென்னை லெஜண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் சென்னை அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை வீரர் சுரேஷ் செல்வம் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 111 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் ஜெனிஷ் ஆண்டோ சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பரிசளிப்பு விழாவில் இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.
The post எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி appeared first on Dinakaran.