என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

2 months ago 9

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தேர்தல் எப்படி நடக்கும், எப்படி வியூகம் வகுப்பது என்பது எனக்கு தெரியும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. ஒருமுறை நான் ஏமாந்துவிட்டேன். அது கோவிட் காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன். சிலர் எனக்கு எதிராக துரோகங்களை செய்தனர். அத்தகையவர்களை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு. நான் யாரையும் மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன். என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஏனென்றால் 60, 70 ஆண்டுகள் திமுகவை வளர்த்தவன் நான். ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்று இருப்பவன் நான். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

The post என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article