'என்னுடன் பணியாற்ற யாரும் விரும்பவில்லை' - ராயன் நடிகர்

2 months ago 9

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், எந்த பெரிய தயாரிப்பாளர்களும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை என்று சந்தீப் கிஷன் கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"கடந்த வருடம், நான் 'ஊரு பேரு பைரவ கோனா' மற்றும் 'ராயன்' படங்களில் நடித்திருந்தேன். முதல் படம் சராசரியான வெற்றியை பெற்றிருந்தாலும், ராயன் பிளாக்பஸ்டர் ஆனது. அடுத்ததாக வெளியாக உள்ள எனது புதிய படம் 'மசாக்கா'. அதனைத்தொடர்ந்து, சஞ்சய்யுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

என்னுடைய நினு வீடனி நீதானி நேனேக்கு முன், நான் ஒரு சவாலான கட்டத்தை கடந்து வந்தேன். எனக்கு அப்போது வாய்ப்புகள் வரவில்லை. இதனால், சில தயாரிப்பாளர்களை அணுகினேன், ஆனால் அவர்கள் என்னுடன் பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் என்னை நடத்திய விதம், என்னைப் பார்த்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை' என்றார்.

Read Entire Article