‘என்ன தா.மோ.அன்பரசனையே பாத்துட்டு இருக்கீங்க..’ செல்வபெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு: சட்டசபையில் சிரிப்பலை

1 day ago 3

பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை(காங்கிரஸ்) பேசுகையில், ‘‘அமைச்சர் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பேரவையிலே குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளுக்கு பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அறிவித்தார். அந்தப் பணி எந்த நிலையில் இருக்கிறது? தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வருமா?’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘இது குளம் சம்பந்தப்பட்ட கேள்வி என்பதால் அதைப்பற்றிய குறிப்புகள் என்னிடம் இல்லை. ஆனால், நீங்கள் கேட்கிறீர்கள். இன்றைக்கு மாலைக்குள்ளாக எங்களுடைய அதிகாரிகள் அந்தப் பணியின் நிலை என்ன, எப்படி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, எந்த நிலையிலே நிற்கிறது என்பது பற்றிய முழு விவரம் உங்களுக்கு சொல்லப்படும்’’ என்றார்.

செல்வபெருந்தகை பேசும் போது அமைச்சர் தா.மோ.அன்பரசனை பார்த்து, பார்த்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “என்ன அமைச்சர் தா.மோ.அன்பரசனையே நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

The post ‘என்ன தா.மோ.அன்பரசனையே பாத்துட்டு இருக்கீங்க..’ செல்வபெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு: சட்டசபையில் சிரிப்பலை appeared first on Dinakaran.

Read Entire Article