என்ன இருந்தாலும் விஜய் என் தம்பி: காக்கா பிடிக்கும் சீமான்

2 months ago 9

கடையநல்லூர்: நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி:
கூட்டணி வைப்பது என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். நான் என் கால்களை நம்பியே மக்களை சந்திப்பேன். என்னால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாவிட்டாலும் என்னை தொடர்ந்து வரும் என் தம்பி, தங்கைகள் நல்லாட்சி அமைப்பார்கள். எனவே கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணியில் சேர மாட்டேன். என்ன இருந்தாலும் தவெக தலைவர் விஜய் என் தம்பி. அன்பு, பாசத்தில் துளி அளவும் குறையவில்லை.

அவரின் கொள்கைகளுக்கும், எங்களது கொள்கைகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. முதலில் அவர் தனது கொள்கைகளை திருத்திக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார். எம்ஜிஆர், கலைஞரை விட விஜய் பெரிய ஆளா, கூமுட்டை கொள்கை என்றெல்லாம் விஜய்யை கடுமையாக தாக்கி வந்த சீமான் திடீரென மீண்டும் விஜய் என் தம்பிதான் என்று கூறியிருப்பதை காக்கா பிடிக்கிறாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

The post என்ன இருந்தாலும் விஜய் என் தம்பி: காக்கா பிடிக்கும் சீமான் appeared first on Dinakaran.

Read Entire Article