
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் பிரசாந்த் நீலுடன் 'என்.டி.ஆர்-நீல்' படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
வருகிற 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 'என்.டி.ஆர்-நீல்' படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் 'வார் 2' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 'வார் 2' படக்குழு முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதால், என்.டி.ஆர்-நீல் படக்குழுவினர், வார் 2 படத்திற்கு வழிவிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற 20 ஆம் தேதி திட்டமிடப்பட்ட என்.டி.ஆர்-நீல் படத்தின் கிளிம்ப்ஸ் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.