என்கவுன்டரில் 7 நக்சல்கள் பலி

2 months ago 11

நாராயண்பூர்: சட்டீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். காட்டிற்குள் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று அதிகாலை துப்பாக்கி சண்டை வெடித்தது. இதனையடுத்து வீரர்கள் நடத்திய தாக்குதலில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் தொடர்ந்து வருகின்றது. கொல்லப்பட்ட 7 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றது.

The post என்கவுன்டரில் 7 நக்சல்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article