என்எஸ்எஸ் முகாமில் இலவச மருத்துவ சிகிச்சை

3 months ago 22

 

திருத்துறைப்பூண்டி, அக். 5: என்எஸ்எஸ் முகாமில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில்மணலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருப்புகழ் செல்வன் தலைமையில் மருத்துவர் நந்தினி, கிராம சுகாதார செவிலியர் அஞ்சம்மாள், செவிலியர்கள் தேன்மொழி, ஜெயந்தி, இசக்கியம்மாள் கொண்ட மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர். மணலி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.

மருத்துவர் திருப்புகழ்ச்செல்வன் உடல்நலம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்வு பற்றியும்,உடலில் இயங்கும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். இதில் மணலி ஊராட்சி மன்ற தலைவர் சுமுத்ரா ரவி, திட்ட அலுவலர் ஜெனிட்டா, உதவி திட்ட அலுவலர் திவ்யா கலந்து கொண்டனர்.

The post என்எஸ்எஸ் முகாமில் இலவச மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article