
விசாகப்பட்டினம்,
விரைவில் வெளியாகவுள்ள ஹாரர் காமெடி படமான 'சுபம்' மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இதற்கிடையில், இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அதில் இயக்குனர் பேசுகையில், "சுபம் படத்தின் காலை காட்சியை பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அவர்கள்தான் படத்தை பரப்புவார்கள். சுபம் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு, அதை மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பார்கள். சுபம் பிளாக்பஸ்டர் படம். இது என்னுடைய வாக்குறுதி" என்றார். இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.