திருத்துறைப்பூண்டி, அக்.2: என்.எஸ்.எஸ். முகாமில் மாணவிகளுக்கு தீ விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மணலி ஊராட்சியில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு நிலை அலுவலர் அன்பழகன், தீயணைப்பு நிலைய காவலர்கள் கார்த்திக், பெத்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா ரவி, உதவி தலைமை ஆசிரியர் எலிசபெத் மேரி, திட்ட அலுவலர் ஜெனிட்டா, உதவித்திட்ட அலுவலர் திவ்யா, நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிலை அலுவலர் மாணவிகளுக்கு பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வீடுகளில் கேஸ் சிலிண்டரில் தீ ஏற்பட்டால் எவ்வாறு அதனை அணைக்கவேண்டும். தீயின் வகைகள் குறித்தும், உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும்.
தீயணைப்பு நிலைய எண் 101 குறித்து வைத்துக் கொண்டு எங்கேயேனும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும் முகாமில் வலியுறுத்தப்பட்டது.
The post என்.எஸ்.எஸ். முகாமில் தீ விபத்துகள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.