சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ரசிகர்களுக்கு நடிகர் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கேம் சேஞ்சர் படத்திற்கு நாங்கள் கொடுத்த அனைத்து உழைப்பையும் உண்மையிலேயே பயனுள்ளதாக்கியதற்காக என் இதயத்திலிருந்து மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை சாத்தியமாக்க திரைக்கு முன்னாலும் பின்னாலும் உழைத்த அனைவருக்கும் நன்றி.
கேம் சேஞ்சர் எப்போதும் என் இதயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும். உங்களில் எல்லையில்லா அன்புக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்' என்றார்.