சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

2 hours ago 3

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல மணற் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் படைத்த திருவள்ளுவர் மணற் சிற்பத்தின் படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்..

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 


சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்♥️

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.#திருவள்ளுவர்நாள் #வள்ளுவம்_போற்றுதும் #StatueOfWisdom https://t.co/tZc96T2luf

— M.K.Stalin (@mkstalin) January 15, 2025


Read Entire Article