திருவனந்தபுரம்: ‘என் வீட்டில் அம்மாவை தவிர யாருமே நார்மல் கிடையாது. அக்கா சந்நியாசி ஆகிவிட்டார். அப்பா ஒரு காலத்தில் நக்சலைட்டாக இருந்தார்’ என்று நடிகை நிகிலா விமல் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் ‘பாக்யதேவதா’ என்ற படத்தில் அறிமுகமான நிகிலா விமல், பிறகு ‘அரவிந்தன்டெ அதிதிகள்’, ‘ஞான் பிரகாசன்’, ‘அஞ்சாம் பாதிரா’, ‘குருவாயூரம்பல நடையில்’, ‘ஒரு ஜாதி ஜாதகம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘பஞ்சு மிட்டாய்’, ‘தம்பி’, ‘ரங்கா’, ‘போர் தொழில்’, ‘வாழை’ உள்பட பல படங்களிலும் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். அவரது தந்தை பவித்ரன், தாய் விமலா தேவி. இந்நிலையில், நிகிலா விமலின் அக்கா அகிலா விமல் சமீபத்தில் சந்நியாசி ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வந்த அவர், சந்நியாசி ஆன பிறகு தனது பெயரை அவந்திகா பாரதி என்று மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினர் குறித்து நிகிலா விமல் கூறியது வருமாறு: என் குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் கிடையாது. 4 பேரில் அம்மா மட்டுமே நார்மல். இப்போது கூட அவர் தினமும் வேலைக்கு சென்று வருகிறார். அப்பா ஒரு பழைய நக்சலைட். நான் ஒரு கம்யூனிஸ்ட். என் அக்காவுக்கு 36 வயதாகி விட்டது. அவர் நன்கு படித்த ஒரு அறிவாளி. நான் சினிமாவில் இருப்பதால் பிரபலமானேன். என் அக்கா புத்தி கூர்மை கொண்டவர். 36 வயதான அவருக்கு சுயமாக சிந்திக்கும் உரிமை இருக்கிறது. நன்கு சிந்தித்த பிறகுதான் சந்நியாசி ஆகும் முடிவை அவர் எடுத்தார். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post என் அக்கா சந்நியாசி- தந்தை நக்சலைட்! நடிகை நிகிலா விமல் பகீர் தகவல் appeared first on Dinakaran.