
சென்னை,
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், 'எனை சுடும் பனி'. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அருள் தேவ் இசை அமைக்கிறார்.
"ஐபிஎஸ் அதிகாரியாகும் லட்சியத்தில் இருக்கிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். எதிர்பாராத விதமாக அவர் போலீஸ் விசாரணைக்குள் சிக்குகிறார். அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்? அவரின் ஐபிஎஸ் கனவு நிறைவேறியதா என்பது படம். சைக்கோ, கிரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ், காதல் என்று இதன் கதைச் செல்லும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது" என்கிறார் இயக்குநர்.
காதலுக்கு எதிரியாக இருக்கும் ஒரு குற்ற சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும் அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார். சென்னை, பொள்ளாச்சி, நெல்லியம்பதி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் "எனை சுடும் பனி" படத்தின் "தீராத ஆசையே..." பாடலை இயக்குனர் திரு. கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். இப்படம் வரும் 21 ம் தேதி வெளியாகிறது.