எனது வாழ்க்கையில் 2 காதல்கள் உண்டு - நடிகை வேதிகா

1 week ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. 'மதராசி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'முனி, சக்கரகட்டி, காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகை வேதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, தனது மனதில் இருக்கும் 2 காதல்கள் பற்றி அவர் பேசியுள்ளார். அவர் கூறும்போது, "எனது வாழ்க்கையில் 2 காதல்கள் உண்டு. ஒன்று என் அன்னையிடம். அதுதான் என் முதல் காதல். முத்தான காதல்.

இரண்டாவது காதல் என்பது நடனம். நடனம் மீது பைத்தியம் நான். ஓய்வு நேரம் கிடைத்தாலே போதும் நடனம் ஆட தொடங்கிவிடுவேன். இந்த இரண்டு காதல்களும் என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்'' என்றார். 'அப்படி என்றால் ஆண்கள் மீது காதலே வராதா?' என்ற கேள்விக்கு, 'அது வரும்போது பார்க்கலாம்' என்று கூறியுள்ளார்.

Read Entire Article