
மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005ம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.
நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஹனிரோஸ், அணியும் உடைகளை ரசிப்பதற்காகவே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இதற்கிடையில் காதல் குறித்து ஹனிரோஸ் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அவர் கூறும்போது, " உலகின் அழகான விஷயம் என்று பார்த்தால், அது காதல் மட்டுமே. மனிதரின் வாழ்க்கை காதல் இல்லாமல் முழுமையடையாது. என்னுள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இப்போது அது இல்லை. என் வாழ்க்கைக்கான, எனக்கேற்ற சரியான நபருக்காக காத்திருக்கிறேன். இன்னும் அவர் என் பார்வையில் விழவில்லை. அப்படி அந்த நபர் என் கண்ணில் பட்டுவிட்டால், விடமாட்டேன்" என்றார்.