எனக்காக என் மனைவி பல தியாகங்களை செய்துள்ளார் - அஜித் குமார்

2 hours ago 2

சென்னை,

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவிரவித்தார். அந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டார். இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், "பத்மபூஷன் விருது வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. நான் சரியான பாதையில் இருப்பது போல் உணர்கிறேன். 33 வருடங்களாக என் வேலையை நேசித்து செய்கிறேன், என்னுடைய வாழ்க்கையை நான் எளிதாக வாழ விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

மேலும், "எனக்கு மிகப்பெரிய பலம் என் குடும்பம் தான். இந்த நேரத்தில் என்னுடைய மனைவி ஷாலினியை பற்றி பேச கடமைப்பட்டிருக்கிறேன். எனது வெற்றி தோல்வி என அனைத்திலும் தூணாக நின்றவர் ஷாலினி. நான் ஷாலினியை திருமணம் செய்தபோது பிரபல நடிகையாக இருந்தார். எனக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனக்காக அவர் பல தியாகங்களை செய்துள்ளார். நான் எடுத்த எல்லா முடிவுகளிலும் பக்கபலமாக இருந்திருக்கிறார். எனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரமும் எனது மனைவிக்கு சேரும்" என அஜித் தெரிவித்தார்.

Read Entire Article