எந்த வீரர்களுடன் இணைந்து விளையாட விரும்புகிறீர்கள்..? தோனி பதில்

1 day ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இந்தியாவுக்காக 3 ஐ.சி.சி. வெள்ளைப்பந்து கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்த பெருமைக்குரியவர்.

ஐ.பி.எல். தொடரிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்த மகேந்திரசிங் தோனி சாதாரன வீரராக விளையாடி வருகிறார்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த காலங்களில் விளையாடிய எந்த வீரர்களுடன் இணைந்து விளையாட விரும்புகிறீர்கள்? என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மகேந்திரசிங் தோனி, "சேவாக், சச்சின், கங்குலி மற்றும் யுவராஜ் சிங்" ஆகியோரின் பெயர்களை கூறினார்.

இருப்பினும் தோனி கூறிய வீரர்களில் விராட் கோலி இடம்பெறாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article