கொள்கையை விட்டுவிட்டு பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக கூட்டணி அமைக்காது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களில் உயர்வு கல்வித் துறை அமைச்சர் கோவி .
செழியன் கலந்து கொள்வதை வைத்து திமுகவுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு என்று முடிச்சு போட வேண்டாம் என்றார்.