சென்னை: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்தரேசன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
குழந்தை வைஷாலினி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததால், எலிகளை கட்டுப்படுத்து வதற்காக சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார்.