
கராச்சி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதே சமயத்தில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டு ஆடி வருகின்றன.
இந்நிலையில், லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸிடம், செய்தியாளர்கள் சந்திப்பில், நீங்கள் ஐ.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் இரண்டிலும் விளையாடியுள்ளீர்கள், இதில் எது சிறந்த லீக் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த சாம் பில்லிங்ஸ் கூறியதாவது, இந்த கேள்விக்கு நான் முட்டாள்தனமான பதிலை சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் டி20 லீக் முதற்கொண்டு அனைத்துமே ஐ.பி.எல்-லை போல நடத்தவேண்டும் என்ற முனைப்பில் தான் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல்-லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது. அனைத்துமே ஐ.பி.எல்-லுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.