
சென்னை,
தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'கனிமா' பாடல் இணையத்தில் வைரலானது.
இதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே, விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாகவும் , ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியும் இருக்கிறார். இதற்கிடையில், ரெட்ரோ படத்தின் புரமோசனில் தற்போது பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார்.
இதில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைவது பற்றி பூஜா ஹெக்டே பேசினார். அவர் கூறுகையில், "நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்போம்" என்றார்.
இதற்கு முன்பு பூஜா ஹெக்டேவும், அல்லு அர்ஜுனும் 'வைகுண்டபுரம்' மற்றும் 'டிஜே' படங்களில் பணியாற்றியுள்ளனர். இந்த 2 படங்களிலும் இருவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. எனவே அவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்களா என்ற ஆர்வம் தற்போது எழுந்துள்ளது.