
சென்னை,
பிரபல ஹாலிவுட் இயக்குனர் டூட் பிலிப்ஸ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. இப்படத்தில் கதாநாயகனாக ஜாக்குவான் பீனிக்ஸ் நடித்திருந்தார்.இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்திற்கு 'ஜோக்கர்: போலி எ டியூக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2-ந் தேதி உலகம் முழுவதும் வெளியான 'ஜோக்கர்' படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், முதல் பாகத்தில் இருந்த அளவிற்கு 'ஜோக்கர் 2' படத்தில் கதை இல்லை. மேலும் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கான வலுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

முதல் பாகம் வசூலில் உலகம் முழுவதும் சாதனை புரிந்தநிலையில், இந்த படம் உலகம் முழுவதும் 40 மில்லியன் டாலர்கள் வசூலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.