எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயம்

3 months ago 19

மும்பை: துப்பாக்கியை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயமடைந்தார். காலில் குண்டடிபட்டதை அடுத்து நடிகர் கோவிந்தா, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பையில் வசித்து வரும் நடிகர் கோவிந்தா தனது வீட்டில் வைத்துருந்த துப்பாக்கியை இன்று அதிகாலை 4,45 மணியளவில் எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் நடிகர் கோவிந்தா அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் கோவிந்தா காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அகற்றினர். நடிகர் கோவிந்தா நலமுடன் உள்ளதாக மும்பை மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலத்துடன் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் கூறியதாவது: “கொல்கத்தாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6 மணி விமானத்தில் செல்ல இருந்தோம். நான் முன்னதாக விமான நிலையத்துக்கு சென்றுவிட்டேன்.

கோவிந்தா வீட்டில் இருந்து புறப்படும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்ததில் வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக அவரது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

The post எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயம் appeared first on Dinakaran.

Read Entire Article