மன்னார்குடி, பிப். 10: திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண் ணெய் பனை இயக்கம் 2024 – 25 திட்டத்தின் கீழ் மன்னார்குடி , கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் வட்டாரங்களுக்கு 6 எக் டர் பரப்பில் இலக்கு இவ்வாண்டு பெறப்பட்டுள்ளது இந்த இலக்கினை 100 சதவீதம் அடைய முயற்சிக்குமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் நீதி மாணிக்கம் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யஜோதி கூறி யது, எண்ணை பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டு களில் மகசூல் தரவல்லது. ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது . இதிலிருந்து 4 முதல் 6 டன் ஹெக்டர் அளவு எண்ணெய் பெறப்படுகிறது.
இவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ண யிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றிற்கு 13,652 இலிருந்து 16 ஆயிரம் வரை அரசு அங்கீகரித்த கோத்ரேஜ் அக்ரோவாட் லிமி டெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப் படுவதனால் விவசாயிகளு க்கு விற்பனை செய்வதில் சிரமம் இன்றி கையாள முடிகிறது.இந்த எண்ணெய் பனையினை சாகுபடி செய்வதற்கு தேவையான மண் வகை களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி பயிர் செய்ய ஏற்றதாகும்.
எனவே, எண்ணெய் பனை சாகுபடி செய்து மானியம் பெற விரும்பும் பயனா ளிகள் இதற்கு தேவையான ஆவணங்களான கணினி சிட்டா அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, பண்ணை வரை படம் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலு வலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் பயன் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலக தோட்டக் கலை உதவி இயக்குனர் சத்ய ஜோதி 9500567619, மன்னார்குடி தோட்ட கலை அலுவலர் வடமலை 9788596998, கோட்டூர் தோட்டக்கலை அலுவலர் முத்து சுந்தரம் 6381651039, தோட்டக்கலை துணை அலுவலர் பெரியசாமி 9976476328 மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளாம் என்றார்.
The post எண்ணெய் பனை சாகுபடி செய்ய மானியம்: மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.