எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்படுத்திய சிபிசிஎல்-க்கு ரூ.73 கோடி அபராதம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

4 months ago 13

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்து பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி படகுகள், வலைகள் மீது பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து பாழாகின. குடியிருப்புசுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது.

Read Entire Article