“எங்கள் ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

1 week ago 3

சென்னை: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த கூறவில்லை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவே கோரினோம் என சட்​டத்​துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி விளக்கம் அளித்துள்​ளார். சட்​டப்​பேர​வை​யில் இருந்து அதி​முக உறுப்​பினர்​கள் வெளி​யேற்​றப்​பட்ட நிலை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி, டாஸ்​மாக் வழக்கு தொடர்​பாக குற்​றச்​சாட்​டு​களை தெரி​வித்​தார்.

இதற்கு பதிலளித்து சட்​டத்​துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி பேசி​ய​தாவது: டாஸ்​மாக் வழக்கை உச்ச நீதி​மன்​றத்​தில் எல்லா வழக்​கு​களை​யும் சேர்த்து ஒன்​றாக விசா​ரி​யுங்​கள் என்​று​தான் நாங்​கள் கேட்​டிருக்​கிறோமே தவிர, வேறு மாநிலத்​துக்​குச் சென்று எங்​களு​டைய வழக்கை விசா​ரிக்க வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை.

Read Entire Article