எக்ஸிம் வங்கியில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்

3 months ago 23

பணி: Management Trainee:
பிரிவு- Banking Operations. மொத்த இடங்கள்: 50 (பொது-22, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-5).

தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து நிதி/சர்வதேச வணிகம்/அயல்நாட்டு வணிகம் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ படித்திருக்க வேண்டும்.

வயது: 01.08.2024 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.48,480-85,920. ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பைனன்சியல் ஸ்டேட்மென்ட் மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.www.eximbankindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2024

The post எக்ஸிம் வங்கியில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article