சென்னை: முகூர்த்த நாளில் பத்திரப் பதிவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் பிப்.2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று அரசு அறிவித்த நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்ததால் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
முகூர்த்த நாளான பிப்.2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடுதலான பத்திரப் பதிவுகள் இருக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் செயல்படும். இந்த விடுமுறை நாளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும்” என அரசு அறிவித்தது.